வெளிநாட்டு சொகுசு கார்களுக்கு திரை பிரபலங்கள் வரி செலுத்துவதில்லை - சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு குற்றச்சாட்டு…

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் கார்களுக்கு, திரை பிரபலங்கள் வரி செலுத்தாததால் வரி வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு குற்றம்சாட்டியுள்ளது.

Update: 2019-09-13 00:16 GMT
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் கார்களுக்கு, திரை பிரபலங்கள் வரி செலுத்தாததால் வரி வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு குற்றம்சாட்டியுள்ளது. தமது ரோல்ஸ் ராய்ஸ் காரை பதிவு செய்ய உத்தரவிடக் கோரி, திரைப்பட இயக்குநர் சங்கர், தொடர்ந்த வழக்கு விசாரணையில், தமிழக அரசு இவ்வாறு கூறியுள்ளது. இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்த காருக்கு, ஒருகோடியே 72 லட்சம் ரூபாய் செலுத்திய பிறகும், பதிவு செய்து தர மறுப்பதாக கூறி 2012 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். நுழைவுக் கட்டணம் கட்டுவதற்கு எதிராக தொடர்ந்து வழக்கின் விசாரணை மீண்டும் இன்று விசாரிக்கப்படுகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்