காசநோய் : புதிய கூட்டு மருந்து சிகிச்சை துவக்கம்

காச நோய் தடுப்புக்கு, புதிய வகையான கூட்டு மருந்து சிகிச்சை முறையை நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னையில் துவங்கி வைத்தார்.

Update: 2019-09-13 00:12 GMT
காச நோய் தடுப்புக்கு, புதிய வகையான கூட்டு மருந்து சிகிச்சை முறையை நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னையில் துவங்கி வைத்தார். துவக்க விழாவுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  நாட்டிலேயே முதன்முறையாக தமிழகத்தில், இந்த சிகிச்சை முறை துவங்கப்படுகிறது என்றார். 2030 ஆம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிக்க, உலக சுகாதார அமைப்பு, இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், இந்தியாவில், 2025ஆம் ஆணடுக்குள் காச நோயை ஒழிக்க வேண்டும் என்பது மத்திய அரசின் இலக்கு என்றார். நோயாளி ஒருவருக்கு அறுபத்து ஓராயிரம் ரூபாய் செலவில், காசநோய் சிகிச்சைக்கான மருந்துகள் வழங்கப்படுவதாக கூறிய அமைச்சர், தமிழகத்தில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு காச நோய் பாதிப்பு இருப்பதாக கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்