பலத்த காற்றுடன் மழை - வாகன ஓட்டிகள் அவதி

வெப்பச்சலனம் காரணமாக, தமிழகம் மற்றும் புதுசேரியில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், புதுச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது.

Update: 2019-09-11 22:51 GMT
வெப்பச்சலனம் காரணமாக , தமிழகம் மற்றும் புதுசேரியில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில்,  புதுச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

3 மணி நேரம் மழை - மக்கள் உற்சாகம் 


கும்பகோணத்தில மக்கள் கடும் வெப்பதினால் மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில், அங்கு மூன்று மணி நேரம் மழை பெய்தது. தாராசுரம், சாமிமலை, கபிஸ்தலம், பாபநாசம், திருநாகேஸ்வரம் உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது, மழையினால் வெப்பம் தணிந்து அங்கு குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். 

பலத்த காற்றுடன் கூடிய கனமழை


வெப்பச்சலனம் காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. துறைமங்களம், வாலிகண்டபுரம், குன்னம், பாடலூர், வேப்பூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நீண்ட நேரம் கன மழை பெய்தது, இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்