ப.சிதம்பரத்தின் ஜாமின் மனு இன்று விசாரணை
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு விவகாரத்தில், ஜாமீன் வழங்கக்கோரி ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சிபிஐ தொடர்ந்த வழக்கில் தனக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதற்கு எதிராகவும், ஜாமீன் வழங்கக் கோரியும், ப. சிதம்பரம், டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி சுரேஷ் குமார் கெய்த் அமர்வில் இன்று நடைபெறுகிறது. இதற்கிடையே, ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ஆஜராகுமாறு முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் முன்னாள் தனி உதவியாளர் கே.வி.கே. பெருமாளுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.