4-வது உலக பல் மருத்துவ மாநாடு - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்தார்
நோயாளிகளுக்கு ஆன்டிபயோடிக் மருந்துகள் கொடுப்பதை மருத்துவர்கள் தவிர்க்க வேண்டுமென தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கேட்டுக்கொண்டுள்ளார்.
நோயாளிகளுக்கு ஆன்டிபயோடிக் மருந்துகள் கொடுப்பதை மருத்துவர்கள் தவிர்க்க வேண்டுமென, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் 4-வது உலக பல் மருத்துவ மாநாட்டினை தொடங்கி வைத்து பேசிய ஆளுநர், பல் மருத்துவ துறையில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டு வந்ததற்காக, தனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்வதாக கூறினார். மேலும், உடல் வலி, பல் வலி போன்ற பிரச்சினைகளுக்கு ஆன்டிபயோடிக் மருந்துகள் கொடுப்பதால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாக கூறிய அவர், மருத்துவர்கள் ஆன்டிபயோடிக் மருந்துகள் பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு, இதுபோன்ற நவீன சிகிச்சை முறைகளை பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.