பில்லூர் அணை நீர்பிடிப்பு பகுதிகளில் தொடரும் கனமழை : பாதுகாப்பான இடத்திற்கு மக்கள் செல்ல அறிவுரை
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பில்லூர்அணை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், அணைக்கு வினாடிக்கு 36 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பில்லூர்அணை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், அணைக்கு வினாடிக்கு 36 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் பாதுகாப்பு கருதி நான்கு மதகுகள் மூலம் 36 ஆயிரம் கன அடி உபரி நீர் திறந்து விடுப்படுவதால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த பகுதிகளில் தண்டோரா போட்டு பொது மக்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.