வெப்பச்சலனம் காரணமாக லேசான மழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு, கடலோர மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு, கடலோர மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் கடலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.