பத்மநாபபுரம் அரண்மனையில் குவியும் சுற்றுலா பயணிகள்

ஆசியாவிலேயே மரத்தால் ஆன பெரிய அரண்மனையான, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனையில், விடுமுறை தினமான இன்று, ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

Update: 2019-07-28 11:56 GMT
ஆசியாவிலேயே மரத்தால் ஆன பெரிய அரண்மனையான, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனையில், விடுமுறை தினமான இன்று, ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். பழங்கால கட்டிட கலையை பறைசாற்றும் வகையில் கட்டப்பட்டுள்ள அரண்மனையின் அழகை ரசிக்கும் அவர்கள், மன்னர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட வாள், கத்தி, துப்பாக்கி உள்ளிட்ட பொருட்களையும் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். கண்கவர் கலை பொருட்கள், வாழ்வியல் முறைகள் மற்றும் வரலாற்றை தெரிந்து கொள்ள நாள் முழுவதும் அரண்மனையை சுற்றிப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்