பா.ம.க நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள் : தி.மு.க தலைவர் ஸ்டாலின் வாழ்த்து
பா.ம.க நிறுவனர் ராமதாஸின் பிறந்த நாளையொட்டி, அவருக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பா.ம.க நிறுவனர் ராமதாஸின் பிறந்த நாளையொட்டி, அவருக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ராமதாசுக்கு தனது இதயமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்வதாக கூறியுள்ளார். மேலும், முத்து விழாவினை கொண்டாடும் ராமதாஸ் அவர்கள், சிறப்பான உடல்நலனுடனும், நிறைவான மனவளத்துடனும், நீண்ட காலம் வாழ, வணக்கத்துடன் வாழ்த்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.