கள்ளக்காதலனை கொலை செய்து எரித்த பெண் கைது

மதுரையில் கள்ளக்காதலனை கொலை செய்து மண்ணெண்ணை ஊற்றி எரித்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-07-19 21:33 GMT
மதுரை திருமங்கலத்தை அடுத்த கல்லுப்பட்டி வடக்கு தெருவில் வசித்து வருபவர் காளீஸ்வரி. இவரது கணவர் இறந்துவிட்ட பின் தனியே வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவரது வீட்டில் எரிந்த நிலையில் வாலிபர் உடல் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  இதையடுத்து அங்கு சென்று உடலை கைப்பற்றிய போலீசார் நடத்திய விசாரணையில் இறந்தது அதே பகுதியை சேர்ந்த வெயில்முத்து என்பது தெரியவந்தது. காளீஸ்வரியுடன் அவர் கள்ளத்தொடர்பில் இருந்ததும் அவரது வீட்டிலேயே தங்கியிருந்ததும் தெரியவந்தது. இந்நிலையில் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், காளீஸ்வரி அவரை தள்ளிவிட்டுள்ளார். அதில் கீழே விழுந்த வெயில்முத்துவுக்கு தலையில் காயம் ஏற்பட்டு இறந்ததும், அதை மறைக்க அவரது உடலை மண்ணெண்ணை ஊற்றி காளீஸ்வரி எரித்ததும் தெரியவந்தது. இதையடுத்து காளீஸ்வரியை கைது செய்த போலீசார், மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்