ஆணவ கொலையை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? - உயர்நீதிமன்றம்

தமிழகத்தில் ஆணவ கொலையை தடுக்க அரசு முயற்சிகள் எடுக்கவில்லை என்று உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

Update: 2019-07-09 13:28 GMT
ஆணவ கொலைகள் தொடர்பாக பத்திரிகையில் வெளியான செய்தியை அடிப்படையாக கொண்டு சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்து கொண்டது. அப்போது தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 81 ஆணவ கொலை நடந்துள்ளதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினார். 

அரசு உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இது போன்ற சம்பவங்கள் நடந்திருக்காது என்று சுட்டிக்காட்டிய நீதிபதிகள், சட்டபேரவை போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளில் கூட சாதியே ஆதிக்கம் செலுத்துவதாக கண்டனம் தெரிவித்தனர்.

சாதியை அரசியல் கட்சிகள் ஊக்குவிப்பதாக குற்றஞ்சாட்டிய  நீதிபதிகள், ஆணவ கொலையை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து வரும் 22ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இதற்கு தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அறிக்கை தாக்கல் செய்ய காலஅவகாசம் கேட்டனர். ஆனால், நீதிபதிகள் அதற்கு கண்டனம் தெரிவித்து, முக்கிய விவகாரங்களில் அரசு கால அவகாசம் கேட்பதை ஏற்க முடியாது என்று தெரிவித்தனர். 



Tags:    

மேலும் செய்திகள்