100 நாள் வேலை வழங்க கோரி பல்வேறு பகுதிகளிலும் போராட்டம்

100 நாள் வேலை மற்றும் நிலுவையில் உள்ள ஊக்கத் தொகையை கேட்டு, நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-06-25 20:21 GMT
100 நாள் வேலை மற்றும் நிலுவையில் உள்ள ஊக்கத் தொகையை கேட்டு, நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வறட்சி பாதித்த பகுதியில் உள்ள மக்களுக்கு 100 நாள் வேலை கேட்டு பொதுமக்கள் மனு கொடுத்து போராட்டம் நடத்தினர். கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், 100 நாள் வேலை திட்டத்தில் பணி புரிந்தவர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்டம் மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு விவசாயிகள், தொழிலாளர் சங்கத்தினர்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 229 ரூபாய் கூலியை குறைக்காமல் முறையாக வாராவாரம் வழங்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். 
Tags:    

மேலும் செய்திகள்