மகனுக்கு சரக்கு ஊற்றி கொடுத்து கொடூரமாக கொன்ற தந்தை - அதிரவைக்கும் காரணம்

Update: 2024-11-07 02:41 GMT

மதுரை மாவட்டம், செல்லூர் பெரியார் தெருவை சேர்ந்தவர் வாசுதேவன். 62 வயதான இவருக்கு ராமன், லட்சுமணன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், இளைய மகன் லட்சுமணன் மது போதைக்கு அடிமையாகி, தந்தை வாசுதேவனை தினமும் அடித்து தொந்தரவு செய்துள்ளார். மகனின் அடாவடிகளை பொறுத்துக் கொள்ள முடியாத வாசுதேவன், சம்பவத்தன்று மகன் லட்சுமணனுக்கு மது வாங்கி தந்துள்ளார். மது போதையில் இருந்த லட்சுமணன் மயங்கி கிடந்ததை பயன்படுத்திக் கொண்ட வாசுதேவன், லட்சுமணன் தலையில் கிரைண்டர் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு, செல்லூர் காவல்நிலையத்தில் சென்று சரணடைந்தார். இந்த சம்பவம் மதுரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்