ரூ.2,912 கோடி வரி செலுத்த சி.டி.எஸ். நிறுவனத்திற்கு நோட்டீஸ் : சி.டி.எஸ். நிறுவனம் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

இரண்டாயிரத்து 912 கோடி ரூபாய் வரி செலுத்த அனுப்பிய நோட்டீஸ் எதிர்த்து காக்னிசன்ட் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Update: 2019-06-25 19:51 GMT
இரண்டாயிரத்து 912 கோடி ரூபாய் வரி செலுத்த அனுப்பிய நோட்டீஸ் எதிர்த்து காக்னிசன்ட் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. காக்னிசன்ட் TECHNOLOGY SOLUTION  எனும் சி டி எஸ் நிறுவனம், அமெரிக்கா மற்றும் மொரிஷியஸ் நாடுகளில் வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு விற்பனை செய்திருந்த 94 லட்சம் பங்குகளை கடந்த 2016 மே மாதம் திரும்ப வாங்கியது.இதற்காக 19 ஆயிரத்து 415 கோடி ரூபாயை வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு திருப்பி செலுத்தியது. இந்தத் தொகைக்கு 15 சதவீத வரியாக 2 ஆயிரத்து 912 கோடி ரூபாயை செலுத்த வேண்டும் என வருமானவரித்துறை சி.டி.எஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது.இந்த நோட்டீசை ரத்து செய்ய கோரி சி டி எஸ் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது நோட்டீசை எதிர்த்து வருமான வரித்துறையிலேயே முறையீடு செய்ய வாய்ப்பு இருந்தும் நேரடியாக நீதிமன்றத்தை நாடியதாக கூறி மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 
Tags:    

மேலும் செய்திகள்