நாளுக்குநாள் அதிகரிக்கும் குடிநீர் தட்டுப்பாடு - அன்றாட வேலைகள் பாதிப்பு என வேதனை
சென்னை மாநகரில் பெரும்பாலான இடங்களில் ஒரு குடம் தண்ணீர் பெற ஒரு மணி நேரம் காத்திருப்பதால் அன்றாட வேலைகள் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்
சென்னை மாநகரில் பெரும்பாலான இடங்களில் ஒரு குடம் தண்ணீர் பெற ஒரு மணி நேரம் காத்திருப்பதால் அன்றாட வேலைகள் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். சென்னையில் நவம்பர் மாதம் வரை தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். இந்நிலையில், கோபாலபுரத்தில் உள்ள பல்வேறு தெருக்களில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை என புகார் எழுந்துள்ளது. கடும் போராட்டத்திற்கு பிறகு, 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரிகள் மூலம் மெட்ரோ குடிநீர் வழங்கப்படுவதாகவும், அதுவும், ஒரு குடம் தண்ணீர் பிடிக்க ஒரு மணி நேரம் காத்திருக்கும் சூழல் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். சில நேரங்களில், ஒரு குடம் தண்ணீரும் கிடைப்பதில்லை எனக் கூறும் அவர்கள், நீண்ட நேரம் குடிநீருக்காக காத்திருப்பதால், அன்றாட வேலைகளில் பாதிப்பு ஏற்படுவதாக கோபாலபுரம் மக்கள் கூறுகின்றனர்.