விராலிமலை : குடிநீருக்காக மாலை முதல் காலை வரை காத்திருக்கும் மக்கள்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை அடுத்துள்ள பகுதிகளில் குடிநீருக்காக மக்கள் மாலை முதல் மறுநாள் காலை வரை காத்திருக்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Update: 2019-06-17 08:54 GMT
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை அடுத்துள்ள பகுதிகளில் குடிநீருக்காக மக்கள் மாலை முதல் மறுநாள் காலை வரை காத்திருக்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அனைத்து இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ராஜாளிப்பட்டி அருகே உள்ள அடி குழாய் ஒன்றே, அங்கு இருக்கும் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கும் குடிநீர் ஆதாரமாக உள்ளது. இந்த குழாயில் ஒரு குடம் தண்ணீர் பிடித்ததற்கு அடுத்து, மீண்டும் தண்ணீர் ஊறிய பின்னரே அடுத்த குடம் பிடிக்க முடியும். இதனால் இரவு முழுவதும் காத்திருந்து தண்ணீர் பிடிக்க வேண்டியுள்ளது. இதனால் மிகுந்த சிரமப்பட்டு வரும் மக்கள், இந்த நிலையை போக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்