குடிநீருக்காக தோண்டிய குழியில் விழுந்து இறந்த குழந்தை...

புதுக்கோட்டையில் குடிநீருக்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்து 3 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2019-06-17 08:00 GMT
புதுக்கோட்டை மாவட்டம் வைத்தூர் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களும், ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களும் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு முறையாக குடிநீர் கிடைக்காத‌தால்,  குடிநீர் பைப்லைனில் ஆங்காங்கே குழி வெட்டியும், நிலத்தில் 5 அடி வரை குழிவெட்டி அதில் இறங்கியும் குடிநீர் எடுத்து வருகின்றனர். இதனால் இரவு நேரங்களில் இவ்வழியாக செல்லும் பொதுமக்கள் அவ்வப்போது குழிகளில் விழுந்து காயமடைவதும் உண்டு. இந்த நிலையில் நேற்று முன்தினம் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்த‌தால் குடிநீருக்காக தோண்டப்பட்ட குழி கண்ணுக்கு தெரியாதவாறு மூழ்கியது. அப்போது அப்பகுதியை சேர்ந்த  சந்திரசேகர் என்பவரது 3 வயது குழந்தை பவதாரணி, குழியில் விழுந்த பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனால் அந்த கிராம‌மே சோகத்தில் மூழ்கியது. முறையாக குடிநீர் வழங்கியிருந்தால் குழந்தை உயிரிழந்திருக்காது என்று குற்றம் சாட்டும் அப்பகுதி மக்கள், சிறுமியின் இறப்புக்கு பிறகாவது மாவட்ட நிர்வாகம் முறையான நடவடிக்கை எடுக்கும் என, எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்