புதிய கல்வி கொள்கை : தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? - முத்தரசன் கேள்வி
புதிய கல்வி கொள்கை பரிந்துரை பட்டியல் தொடர்பாக அனைத்து கட்சி கருத்தைக் கேட்டு மத்திய அரசுக்கு, தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என முத்தரசன் வலியுறுத்தி உள்ளார்.
புதிய கல்வி கொள்கை பரிந்துரை பட்டியல் தொடர்பாக அனைத்து கட்சி கருத்தைக் கேட்டு மத்திய அரசுக்கு, தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என முத்தரசன் வலியுறுத்தி உள்ளார். நாகையில் செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவதில், மக்களின் கருத்தை கேட்காமல் மத்தியஅரசு செயல்படுவதாக குற்றம்சாட்டினார். ஜனநாயகம் தழைக்க வேண்டும் என்றால், கல்வி மாநில பட்டியல் கீழ் வரவேண்டும் என முத்தரசன் வலியுறுத்தினார். தமிழகத்தில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாக கூறிய அவர்,. இதில் அக்கறை செலுத்தாமல், அ.தி.மு.க., கட்சி விவகாரத்திலேயே கவனம் செலுத்தி வருவதாக குற்றம் சாட்டினார்.