அமைச்சர் மணிகண்டன் மீது கருணாஸ் சரமாரி புகார்
அமைச்சர் மணிகண்டன் தன்னிச்சையாக செயல்படுவது குறித்து முதல்வரிடம் 3வது முறையாக புகார் அளிக்க உள்ளதாக நடிகரும், திருவாடணை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் மணிகண்டன் தன்னிச்சையாக செயல்படுவது குறித்து முதல்வரிடம் 3வது முறையாக புகார் அளிக்க உள்ளதாக நடிகரும், திருவாடணை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் தெரிவித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் பாண்டவர் அணிக்கு ஆதரவாக வாக்குகளை சேகரிக்க கருணாஸ் நாமக்கலுக்கு வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமைச்சர் மணிகண்டனின் தலையீடால், தமது தொகுதியில் நடைபெறும் விழாக்களில் தாம் புறக்கணிக்கப்படுவதாக தெரிவித்தார். சட்டமன்ற தொகுதிக்கான நிதியிலிருந்து தான் வளர்ச்சி பணிகளை செய்து வருவதாகவும் கருணாஸ் கூறினார்.