பாலில் தண்ணீர் கலந்தது நிரூபணம் : ஆவின் பால் உற்பத்தியாளர் சங்க செயலாளர் பணியிடை நீக்கம்
ஆவின் பால் உற்பத்தியாளர் சங்கத்தில் பாலில் தண்ணீர் கலந்தது நிரூபணம் ஆனதால் செயலாளர் உட்பட 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள ஆவின் பால் உற்பத்தியாளர் சங்கத்தில் இருந்து சென்னை அம்பத்துர் பால் பண்ணைக்கு அனுப்பிய 5 ஆயிரத்து 500லிட்டர் பாலில் 600 லிட்டர் தண்ணீர் கலந்து இருப்பது சோதனையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து பாலில் தண்ணீர் கலப்படம் செய்தது தொடர்பாக வேலூர் மண்டல துணை மேலாளர் மருத்துவர் உலகநாதன், பால் உற்பத்தியாளர் சங்க ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக, பாலில் தண்ணீர் கலந்தது தொடர்பாக பால் உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் சரவணன் மற்றும் ஊழியர் பழனி ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.