தனியார் ஷாப்பிங் மால், ஓட்டல்களில் திடீர் சோதனை

திருச்சி பேருந்து நிலையம் அருகே உள்ள பிரபல ஷாப்பிங் மால், ஓட்டல்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

Update: 2019-06-06 21:27 GMT
திருச்சி பேருந்து நிலையம் அருகே உள்ள பிரபல ஷாப்பிங் மால்,  ஓட்டல்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். பிற்பகல் 1 மணியளவில் திடீரென அதிரடியாக நடைபெற்ற இந்த சோதனை, இரவு 7 மணி வரை சுமார் 6 மணி நேரமாக நீடித்தது. சோதனையின்போது,  வாடிக்கையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படாத‌தால், ஷாப்பிங் மால் மற்றும் ஓட்டலில் சிறிய சலசலப்பு ஏற்பட்டது. நிறுவனம் மீது தொடர்ச்சியாக வந்த வரி ஏய்ப்பு புகாரின் காரணமாக இந்த சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்