"மருத்துவ நிகர்நிலைப்பல்கலை கட்டணம் முறைப்படுத்த வேண்டும்" - ராமதாஸ் வலியுறுத்தல்
மருத்துவ நிகர்நிலைப் பல்கலைக்கழகக் கட்டணங்களை முறைப்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மருத்துவ நிகர்நிலைப் பல்கலைக்கழகக் கட்டணங்களை முறைப்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு உடனடியாக இவ்விவகாரத்தில் தலையிட்டு, மருத்துவ நிகர்நிலைப்பல்கலைக்கழங்களின் கட்டணத்தை நிர்ணயிக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட குழுவை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், நிகர்நிலைப் பல்கலை கழகங்ளுக்கு மட்டும் நீட் தேர்வை கட்டாயமாக்கி, அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு நீட் தேர்விலிருந்து முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.