கோதாவரி - காவிரி நீர்வழிச்சாலை திட்டம் சாத்தியமா?
கோதாவரி - காவிரி நீர்வழிச்சாலை திட்டம் சாத்தியமானால் தமிழகத்திற்கு மட்டும் 25 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என, பிரபல நீரியியல் நிபுணர் ஏ.சி.காமராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில், தண்ணீர் பிரச்னையை தீர்க்க கூடிய திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. தமிழகத்தின் தண்ணீர் பிரச்னையை தீர்க்க, கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள், நீரியியல் நிபுணர்களும் குரல் கொடுத்து வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலைகள் போல், நீர் கால்வாய் அமைத்து, கோதாவரியில் இருந்து வீணாக ஆண்டு தோறும் கடலில் கலக்கும், தண்ணீரை தமிழகத்திற்கு கொண்டு வர முடியும் என கூறுகிறார் பிரபல நீரியியல் நிபுணரான ஏ.சி.காமராஜ்.