திருமங்கலம் அரசு மருத்துவமனையில் ஆட்சியர் திடீர் ஆய்வு
மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார்களை தெரிவித்தனர்.;
மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார்களை தெரிவித்தனர். திருமங்கலம் அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு தீவிர வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்தும் திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் நாகராஜன், பின்னர் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனையில் இருந்த பெண்கள், மருத்துவர்கள் மீது அடுக்கு அடுக்கான புகார்களை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர். மருத்துவர்கள் தினமும் காலதாமதாக வருவதாகவும், நோயாளிகளை நீண்ட நேரம் வரிசையில் காக்க வைத்து அலைக்கழிப்பதாகவும் குற்றஞ்சாட்டினர்.குழந்தைகளுக்கு தனிப்பிரிவு அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய பெண்கள், மின் விசிறி உள்ளிட்ட வசதிகளை மருத்துவமனையில் ஏற்படுத்தி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.