வீர சைவ மடத்தில் சோழர் கால சிலை, உபகரணங்கள் மாயம்

கும்பகோணம் வீர சைவ மடத்தில் சோழர் கால சிலை அருகே உபரகணங்கள் மாயமானது குறித்து புகார் அளிக்க பழைய நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.

Update: 2019-05-27 04:53 GMT
வீர சைவ மடத்தை நிர்வகிப்பதில், பழைய மடாதிபதி நீலகண்ட சுவாமிகள் மற்றும் நிர்வாக குழு இடையே ஏற்பட்ட மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. இது தொடர்பாக இரண்டு தரப்பினரும் தொடர்ந்து வழக்கு விசாரணையில் இருப்பதால், வீர சைவ மடம் சர்ச்சையில் உள்ளது. இந்நிலையில், வீர சைவ மடத்தின் பழைய நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில், மடத்திற்கு சொந்தமான வீரபத்திரசுவாமி கோவிலில் இருந்த விலைமதிப்பில்லாத சோழர்கால உற்சவர் சிலை மற்றும் வெள்ளி அபிஷேக சாமான்கள் காணாமல் போனது குறித்து சிலை திருட்டு தடுப்புப் பிரிவில் புகார் அளிக்க நிர்வாக குழு முடிவு செய்துள்ளது. இரண்டு தரப்பினர் இடையே வலுக்கும் பிரச்சினைகளால் கும்பகோணம் வீர சைவ பெரிய மடத்தில் பரபரப்பு நீடித்து வருகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்