விவசாயத்துக்கு திரும்பிய வேலையில்லா பட்டதாரி...

பட்டதாரி இளைஞர் ஒருவர், கடும் வறட்சிக்கு நடுவே தமது தோட்டத்தை பசுமை சோலையாக மாற்றி, லாபம் பார்த்து வருகிறார்.

Update: 2019-05-22 13:44 GMT
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள காருவள்ளி கிராமத்தில் வசிக்கும் பட்டதாரி இளைஞர் பிரபாகரன். ஆசிரியர் கல்வி படித்துவிட்டு வேலையின்றி தவித்த அவர், மாற்று சிந்தனையாக வீட்டு தோட்டத்தில் காய்கறி பயிரிட்டு வருகிறார். பொதுவாகவே, ஓமலூர் பகுதியில் கடும் வறட்சி நிலவும் நிலையில், ஆழ்துளை கிணற்றின் மூலமும் சொற்ப அளவே தண்ணீர் கிடைக்கிறது. இருப்பினும் மனம் தளராத பிரபாகரன், குறைந்த அளவு தண்ணீரில் விளையும் 3 மாதகால பயிரான பீர்க்கன்காய் செடியை பயிர் செய்தார். தற்போது அவை விளைச்சலுக்கு வந்துள்ளன. அதிகளவில், காய்களை பெறும் பிரபாகரன், தினந்தோறும் சந்தைக்கு எடுத்துச் சென்று கிலோ 40 ரூபாய் வரை விற்று லாபம் ஈட்டி வருகிறார். வறட்சிக் காலங்களில், குறைந்த தண்ணீரில் வளரும் பயிர்களை சாகுபடி செய்ய  வேண்டும் என்று கூறும் பட்டதாரி விவசாயி பிரபாகரன், வேலையில்லை என புலம்பாமல், இளைஞர்கள் விவசாயத்துக்கு திரும்ப வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்