செல்லியம்மன் கோவில் தேரோட்டம் : வடம்பிடித்து இழுத்துச் சென்ற பக்தர்கள்

சிறுகடம்பூர் செல்லியம்மன் கோவில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.

Update: 2019-05-22 13:25 GMT
சிறுகடம்பூர் செல்லியம்மன் கோவில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே சிறுகடம்பூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற செல்லியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 14 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேரோட்ட நிகழ்சிக்காக,  மா, பலா,  முந்திரி ஆகியவைகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்ட  தேரில் செல்லியம்மன், மாரியம்மன்  தெய்வங்கள் ஏற்றப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. பின்னர், நூற்றுக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்துச் சென்று வழிபட்டனர். பழமை மாறாமல் கிராம மக்களால் தேர் செய்யப்படுவது இந்த கோவிலின் தனிச் சிறப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது
Tags:    

மேலும் செய்திகள்