பொன்பரப்பியில் மறுவாக்கு பதிவு கோரிக்கை : தேர்தல் வழக்கு மூலமாக அணுக நீதிமன்றம் உத்தரவு

தேர்தலின் போது கலவரம் நடைபெற்ற பொன்பரப்பியில், மறுவாக்குப் பதிவு நடத்த கோரும் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

Update: 2019-05-22 11:19 GMT
தேர்தலின் போது கலவரம் நடைபெற்ற பொன்பரப்பியில், மறுவாக்குப் பதிவு நடத்த கோரும் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. சிதம்பரம் மக்களவை தொகுதிக்குட்பட்ட பொன்பரப்பியில், இருபிரிவினரிடையே மோதல் ஏற்பட்டதால் சிலர் வாக்களிக்கவில்லை என்றும்,  மறுவாக்குப் பதிவு நடத்த வேண்டும் எனவும் விஷ்ணுராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இது குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு, உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், நீதிபதிகள் டீக்கா ராமன், ஆதிகேசவலு அமர்வு முன்பு விஷ்ணுராஜ் தரப்பு மீண்டும் முறையிட்டது. கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், தேர்தல் வழக்கு மூலமாக சந்திக்க அறிவுறுத்தி மனுவை தள்ளுபடி செய்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்