மே-23க்கு பிறகு தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமையும் - ஸ்டாலின்
சூலூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் பொங்கலூர் பழனிசாமியை ஆதரித்து ஸ்டாலின் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்
இடைத்தேர்தல் நடைபெற்ற 18 சட்டப்பேரவை தொகுதிகளிலும், வரும் 19 ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள 4 தொகுதிகளிலும் திமுக வெற்றிபெறும் என்று உறுதிபட தெரிவித்தார். மே 23 ந்தேதி வாக்கு எண்ணிக்கை பிறகு மத்தியில் ராகுல்காந்தி தலைமையில் ஆட்சி அமையும் என்று அவர் கூறினார். தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்கும் என்று அண்ணா மீது ஆணையிட்டு கூறுவதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்