ராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கு - அமுதவள்ளி உள்பட 3 பேரிடம் விடிய விடிய விசாரணை

ராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கில் அமுதவள்ளி, முருகேசன் உள்ளிட்டோரிடம் விடிய விடிய நடந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

Update: 2019-05-08 10:49 GMT
ராசிபுரத்தில் குழந்தைகள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக விருப்ப ஓய்வுபெற்ற செவிலியர் உதவியாளர் அமுதவள்ளி அவரின் கணவர் ரவிச்சந்திரன், ஈரோடு தனியார் மருத்துவமனை செவிலியர் பர்வீன் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் மற்றும் தரகர்கள் லீலா, ஹசீனா, அருள்சாமி, செல்வி என மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களுக்கு பல்வேறு பகுதிகளில் உள்ள குழந்தைகள் விற்பனை புரோக்கர்களுடம் தொடர்பு இருப்பது தெரிய வந்த‌தை தொடர்ந்து, வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும், அமுதவள்ளி, ஆம்புலனஸ் ஓட்டுநர் முருகேசன் மற்றும் இடைத்தரகர் அருள்சாமி ஆகியோரை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். நாமக்கல் நீதிமன்றம் மூலம், காவலில் எடுத்த சிபிசிஐடி போலீசார், இரவு 9 மணி முதல் விடிய விடிய விசாரணை நடத்தினர். தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களுக்கும், பிற நாடுகளுக்கும் குழந்தைகளை விற்பனை செய்துள்ளது உள்பட பல திடுக்கிடும் தகவல்கள் இந்த விசாரணையில் வெளிவந்துள்ளன. கொல்லிமலை பகுதியில் மட்டும் 20க்கும் மேற்பட்ட குழந்தைகளை விற்பனை செய்த‌தாகவும் தெரிகிறது. இதனால் ராசிபுரம் குழந்தை கடத்தல் சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்