தடையை மீறி புழக்கத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் : பறிமுதல் பணி தொடரும் - அதிகாரிகள் எச்சரிக்கை
கும்பகோணத்தில் குடோன் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 5 டன் அளவிலான பிளாஸ்டிக் பொருட்களை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கும்பகோணத்தில் குடோன் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 5 டன் அளவிலான பிளாஸ்டிக் பொருட்களை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையிலும், கும்பகோணத்தில் தொடர்ந்து பிளாஸ்டிக் கேரி பேக்குகள் உள்ளிட்ட பொருட்களின் பயன்பாடு அதிகமாக இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து நகராட்சி அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது, பெரிய கடைவீதி செல்லும் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் குடோன் ஒன்றில், சுமார் 5 டன் அளவில் பிளாஸ்டிக் கவர்கள், கேரி பேக்குகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், குடோன் உரிமையாளருக்கு அபராதம் விதித்தனர்.