"பள்ளிக்கல்வித்துறைக்கு தனிச்சேனல் தொடங்கப்பட உள்ளது" : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
பள்ளிக்கல்வித்துறைக்கு தனிச்சேனல் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பள்ளிக்கல்வித்துறைக்கு தனிச்சேனல் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பழனி கோயிலில் சாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார். இந்த ஆண்டு புதிய திட்டமாக மாணவர்களுக்கு இணையத்துடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்பட உள்ளது எனவும், வரும் கல்வியாண்டில் அனைத்து அரசு பள்ளிகளிலும் தமிழ் மற்றும் ஆங்கிலவழிக் கல்வி கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார். தொடர்ந்து ரோபோட்டிக்ஸ் மூலம் கற்பிக்கும் நவீன கல்வி முறை பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவித்த அவர், அரசு பள்ளிகளில் காலியாக உள்ள சுமார் 7 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் தெரிவித்தார்.