காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு
தென் மேற்கு பருவக்காற்று வீசி வருவதால், தேனி பகுதியில் உள்ள காற்றாலைகளில் மின்சாரம் உற்பத்தி அதிகரிக்க தொடங்கியுள்ளது.
ஆண்டிபட்டி, கண்டமனூர், கடமலைக் குண்டு, அம்பாசமுத்திரம், கோவிந்தநகரம், வெங்கடாசலபுரம், உத்தமபாளையம், போடி, தேவாரம் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சுமார் 500 க்கும் மேற்பட்ட காற்றாலைகளில், கடந்த சில வாரங்களாக படிப்படியாக அதிகரித்து வந்த மின் உற்பத்தி, தற்போது 250 மெகாவாட்டை தாண்டியுள்ளது.பெரியாறு, சுருளியாறு மற்றும் முல்லையாறு மின் உற்பத்தி நிலையங்களில் கோடை மற்றும் பராமரிப்பு பணி காரணங்களால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தென் மேற்கு பருவக் காற்றின் வேகத்தால், காற்றாலை மின்சார உற்பத்தி கனிசமாக அதிகரித்துள்ளது. எனவே, அதை முழுமையாக பயன்படுத்தும் வகையில், உள்கட்டமைப்பு வசதிகளை மின் துறையினர் மேம்படுத்தி வருகின்றனர். ஒரு காற்றாலையில் 20ஆயிரம் யூனிட் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் காற்றாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.