கொடநாடு விவகாரம் - அவதூறு பரப்பியதாக புகார் : முதலமைச்சர் தொடர்ந்த மான நஷ்டஈடு வழக்கு

கொடநாடு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மான நஷ்டஈடு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதில் மனு தாக்கல் செய்ய ஜூன் 10ந் தேதி வரை கால அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-04-25 20:25 GMT
கொடநாடு விவகாரத்தில் தம் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் உள்நோக்கத்தோடு  பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவதூறு செய்தி வெளியிட்டதாக  கூறி மாத்யூ சாமுவேல், சயன், மனோஜ் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது கொடநாடு விவகாரம் தொடர்பாக பேச மேத்யூ சாமுவேல் உள்ளிட்டோருக்கு விதித்த தடையும் நீட்டித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்