மாரியம்மன் கோயில் சித்திரை தேர் திருவிழா நிறைவு
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் கடந்த 16ந் தேதி சித்திரை தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் கடந்த 16ந் தேதி சித்திரை தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. தேரோட்டத்தின் நிறைவு நாளான நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைதொடர்ந்து தங்க கமல வாகனத்தில் அம்மன் வீதி் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.