வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி - மாவட்ட தேர்தல் அலுவலர் ரோகிணி தொடங்கி வைத்தார்
சேலம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதியின் வாக்குப்பதிவு இயந்திரங்களில்,வேட்பாளர்களின் சின்னங்களை பொருத்தும் பணி இன்று தொடங்கியது.
தேர்தல் பொது பார்வையாளர் ராஜேஷ் மஞ்சு தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட கட்சியினர் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ரோகிணி தொடங்கி வைத்தார்.வேட்பாளர்கள் சின்னம் பொருத்தும் பணியானது இரண்டு அல்லது நாட்களில் முடிவடையும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கூறப்படுகிறது.