ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்க்கு எதிரான வழக்கு - மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்

ஒ.பி.எஸ் - இபிஎஸ் கையெழுத்திட தடை கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Update: 2019-03-29 07:50 GMT
அ.தி.மு.க-வின் கொள்கை விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குவதற்காக வேட்பு மனுவில் முதலமைச்சர் பழனிசாமியும், துணை முதலமைச்சர் பன்னீர் செல்வமும் கையெழுத்திட தடை விதிக்கக் கோரியும் கே.சி.பழனிசாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. மேலும், அவர்களுக்கு இடைக்கால தடை விதிக்க எந்த காரணமுமில்லை எனவும் நீதிபதி தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்