உயர்நீதிமன்ற வழக்கறிஞராக AOR தேர்ச்சி கட்டாயம் - மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு
AOR எனப்படும் ADVOCATE ON RECORD தகுதி தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டுமே உயர்நீதிமன்ற வழக்கறிஞராக பணிபுரிய அனுமதிக்க உத்தரவிடக் கோரி, கண்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
AOR எனப்படும் ADVOCATE ON RECORD தகுதி தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டுமே உயர்நீதிமன்ற வழக்கறிஞராக பணிபுரிய அனுமதிக்க உத்தரவிடக் கோரி, கண்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இளம் வழக்கறிஞர்கள், கீழமை நீதிமன்றங்களில் பயிற்சி எடுத்தால்தான், வழக்குகள் குறித்து அறிந்து தகுதிகளை உயர்த்திக்கொள்ள இயலும் என்று கூறிய நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் சுந்தர், குறைந்தது ஓராண்டாவது அங்கு பணியாற்ற வேண்டும் என்றனர். இது குறித்து, சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர், இந்திய, தமிழக, புதுச்சேரி பார் கவுன்சில் செயலர்கள், பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.