சொத்து வரி உயர்த்திய ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சொத்துவரி உயர்த்தியது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
சொத்துவரி உயர்த்தியது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மாநகராட்சி, நகராட்சி, நகர பஞ்சாயத்துகளில், குடியிருப்பு கட்டிடங்களின் சொத்து வரி 50 சதவீதமும், குடியிருப்பு அல்லாத பகுதிளுக்கு 100 சதவீதமும் சொத்து வரி கடந்த ஆண்டு உயர்த்தப்பட்டது. இதனை எதிர்த்து திமுக எம்.எல்.ஏ. - ஏ.வ.வேலு சார்பில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.அதில், குடியிருப்பின் மதிப்பை தனித்தனியாக மதிப்பீடு செய்யாமல் சொத்து வரியை உயர்த்தியது சட்டத்தை மீறியது என கூறப்பட்டிருந்தது. அந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு முன் விசாரனைக்கு வந்த நிலையில், மனுதாரரின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், வரி உயர்த்தியது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டதுடன், விசாரணையை 27க்கு ஒத்தி வைத்தனர்.