வேலையில்லா திண்டாட்டம் ஒழிக்கப்படும் - ராகுல் காந்தி
மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் ஏற்படுத்தப்படும்
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வந்தால் வேலையில்லா திண்டாட்டம் ஒழிக்கப்படும் என்று ராகுல் காந்தி கூறினார்.இளம் தொழில் முனைவோருக்கு புதிய சலுகைகள் அளிக்கப்படும் என்றும், சிறு குறு தொழில் தொடங்குவோருக்கு வங்கிக்கடன் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.ஜிஎஸ்டி எளிமைப்படுத்தப்படும் என்றும், மீன்வளத்துறைக்கென தனி அமைச்சகம் ஏற்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமானத்தை வழங்கும் திட்டத்தை உறுதிப்படுத்துவோம் என கூறிய ராகுல் இந்தியாவில் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்களே இல்லாத நிலை உருவாக்கப்படும் என்றும் தெரிவித்தார்