ராமேஸ்வரம் : மகா சிவராத்திரியை முன்னிட்டு கோயிலுக்கு வந்த அகோரிகள்
மேள வாத்தியங்கள் முழங்க சிவனை வழிபட்டனர்
மகாசிவராத்திரியை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வழிபாடு நடத்த அகோரிகள் வந்தனர். வட மாநிலங்களில் உள்ள அகோரிகள் மற்றும் சன்னியாசிகள் கங்கையில் இருந்து புனித நீரை எடுத்துக் கொண்டு ராமேஸ்வரம் ராமநாத சுவாமியை வழிபட வந்தனர். மேள வாத்தியங்கள் முழங்க கோயிலுக்கு வந்த அவர்கள், ருத்ர பூஜை செய்து பின்னர் அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர்.