பாஜகவிற்கு எதிராக மதச்சார்பற்ற சக்திகள் ஒருங்கிணைய வேண்டும் - ஸ்டாலினை சந்தித்த பின் ஜிக்னேஷ் மேவாணி கருத்து
பாஜகவிற்கு எதிராக மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்று குஜராத் சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவாணி கூறினார்.
பாஜகவிற்கு எதிராக மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்று குஜராத் சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவாணி கூறினார். சென்னை வந்துள்ள அவர், திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது , திமுக தலைவர் ஸ்டாலினுடனான சந்திப்பு நட்பு ரீதியானது என்றும், ஜனநாயகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பாஜகவிற்கு எதிராக மதச்சார்பற்ற சக்திகள் ஒருங்கிணைய வேண்டும் என்றும் கூறினார். அதிமுக - பாஜக கூட்டணி , ஆட்சிக்கு வந்தால் மிகப்பெரிய பேரழிவாக மாறிவிடும் என்று கூறியதுடன், திமுக கூட்டணிக்கு பிரச்சாரம் செய்வது குறித்து யோசித்து முடிவெடுப்பேன் என்றும் குறிப்பிட்டார்.