சேலத்தில் நலத்திட்டப் பணிகளை துவக்கி வைத்த முதலமைச்சர்
விவசாயிகளுக்கான பொருட்களையும் வழங்கினார் மானிய விலையில் இருசக்கர வாகனம் விநியோகம் இரட்டை அடுக்கு மேம்பால பணிகள் விரைவில் முடிக்கப்படும்
64 கோடியே 73 லட்ச ரூபாய் மதிப்பில் முடிவுற்ற பணிகளையும், 202 கோடியே 47 லட்ச ரூபாய் மதிப்பில் புதிய பணிகளுக்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். விவசாயிகளுக்கான உபகரணங்கள், மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றையும் முதலமைச்சர் வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் , சுய உதவி குழுக்களுக்கு அதிகம் கடன் வழங்கி வருவதாகவும், சேலத்தில் 325 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் இரட்டை அடுக்கு மேம்பால பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்றும் தெரிவித்தார்