ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை - ராமதாஸ், வாசன் வரவேற்பு
ஸ்டெர்லைட் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று ராமதாஸ், வாசன் தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்றும், இதன் மூலம் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுவது தடுக்கப்பட்டுள்ளதாகவும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் இது தமிழகத்திற்கு கிடைத்த வெற்றி எனவும் அவர் கூறியுள்ளார். இதேபோல் த.மா.கா. தலைவர் வாசன் வெளியிட்ட அறிக்கையில், ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என ஒட்டுமொத்த தமிழக மக்களும் எதிர்பார்த்திருந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.