ஓடும் பேருந்தில் இருந்து கீழே விழுந்த மாணவன் - படிக்கட்டு பயணத்தால் வந்த ஆபத்து
மாணவன் நூலிழையில் உயிர்தப்பிய பேரதிசயம்
அரசுப் பேருந்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் படியில் தொங்கியபடி சென்ற அரசுப் பள்ளி மாணவன் ஒருவன் கீழே விழுந்து, நூலிழையில் உயிர் தப்பும் பரபரப்பு காட்சி வெளியாகியுள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து செல்லம்பட்டி கிராமத்திற்கு டி-2 இலக்க அரசு பேருந்து மாலை 5 மணிக்கு பரந்தூர் வழியாக இயக்கப்படுகிறது. எப்போதும் நிரம்பி வழியும் அந்த வழித்தட பேருந்தில், பள்ளி மாணவர்கள் கூட்டமும் அதிகம். தேசிய நெடுஞ்சாலை வழி பேருந்தில் ஏராளமான மாணவர்கள் தொங்கியபடி செல்கின்றனர். அதில், திடீரென ஒருமாணவன் தவறி கீழே விழுவதும், பின்னால் வந்த வாகனங்களில் அடிபடாமல் நூலிழையில் உயிர்தப்பிய காட்சியும், நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது. ஆனாலும் பேருந்து நிற்கவேயில்லை. போதிய பேருந்துகளை இயக்குவதே இதற்கு தீர்வு என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கை.