ஆர்.கே.நகர் பண பட்டுவாடா விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக கோரிக்கை

ஆர்.கே.நகர் தேர்தல் பணப் பட்டுவாடா வழக்கு ரத்து செய்யப்பட்டதால் புதிய வழக்கு பதிவு செய்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என திமுக தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

Update: 2019-01-24 14:09 GMT
ஆர்.கே.நகர் தேர்தல் பணப் பட்டுவாடா வழக்கு ரத்து செய்யப்பட்டதால் புதிய வழக்கு பதிவு செய்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என திமுக தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக திமுக வேட்பாளர் மருதுகணேஷ், மற்றும் வழக்கறிஞர் வைரகண்ணு ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாரயணன் மற்றும் ராஜமாணிக்கம் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம் தரப்பில் ரகசிய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இருதரப்ப வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கில் சிபிஐயை எதிர் மனுதாரராக சேர்த்து, மனுவுக்கு 
பதிலளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 12 க்கு தள்ளி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்