தி.மு.க. சார்பில் சமத்துவ பொங்கல்

நெல்லையில் திமுக சார்பில் சமத்துவப்பொங்கலிட்டு கோலம் போட்டிகள் நடத்தப்பட்டது.

Update: 2019-01-13 19:43 GMT
தைத்திருநாளான தமிழர் திருநாளையொட்டி நெல்லையில் திமுக சார்பில் சமத்துவப்பொங்கலிட்டு கோலம் போட்டிகள் நடத்தப்பட்டது வெற்றி பெற்றவர்களுக்கு பிரோ,மிக்சி உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில்  திரளான பெண்கள் கலந்து கொண்டனர். 

தைத்திருநாளான தமிழர் திருநாள் வரும் 15-ந்தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் நெல்லையில் மத்திய மாவட்ட திமுக சார்பில் நெல்லை பாளையங்கோட்டை ராமர் கோவில் திடலில் சமத்துவப்பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதற்காக மைதானத்தில் கரும்புகள் தோரணம் கட்டப்பட்டு 11 பானை வைக்கப்பட்டு புத்தரிசியிட்டு பொங்கலிடப்பட்டது. இதில் திமு மத்திய மாவட்ட செயலாளர் அப்துல்வகாப் கலந்து கொண்டு பொங்கல் விழாவைத் தொடங்கி வைத்தார். இந்த விழாவையொட்டி பெண்களுக்கு கோலப்போட்டியும் நடைபெற்றது.இந்த போட்டியில் பல வண்ண பொடிகளில் கோலமிட்டது பார்வையாளர்களை கவர்ந்தது. விழாவின் இறுதியில் கோலப்போட்டியை பார்வையிட்ட விருந்தினர்கள் அதில் வெற்றி பெற்ற பெண்களுக்கு பரிசு வழங்கினார். முதல் பரிசாக 5 அடி பீரோவும் ,இரண்டாம் பரிசாக மிக்சியும் வழங்கபட்டது

இதுபோன்று பாளையங்கோட்டை சட்டமன்ற அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான டி.பி.எம்.மைதீன்கான் தலைமையில் சமத்துவப்பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் முன்னாள் மாவட்ட செயலாளர் கருப்பசாமிப்பாண்டியன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்