புகையில்லா போகி' பிரசார வாகன ஊர்வலம்

துண்டறிக்கை வழங்கி விழிப்புணர்வு பிரசாரம்

Update: 2019-01-13 14:34 GMT
மாசில்லா போகியை கொண்டாட வலியுறுத்தி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரசார வாகனத்தை துவங்கி வைத்தார். பாரம்பரிய விழாவான தை திருநாளின் முதல் நாளான போகியின் போது, பழைய பொருட்களுக்கு தீயிடும் பழக்கம் உள்ளது. அதில், பிளாஸ்டிக், டயர் உள்ளிட்ட பழைய பொருட்களை கொளுத்துவதால், காற்று மாசு ஏற்படுகிறது. இந்தக் காற்று மாசை தவிர்க்கும் விதமாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி, புகையில்லா போகி தலைப்பில் வாகனப் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி துண்டு பிரசுரங்களும் இதில் வழங்கப்பட்டன.
Tags:    

மேலும் செய்திகள்