சென்னைக்கு கோடையில் தண்ணீர் தட்டுப்பாடா?

வடகிழக்கு பருவமழை கைவிட்டதால், ஏரிகளில் நீர் இருப்பு குறைந்து கோடைகாலத்தில் சென்னை மாநகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

Update: 2019-01-04 05:04 GMT
வடகிழக்கு பருவ மழை, இந்த ஆண்டு இயல்பைவிட 23 சதவீதம் குறைவாகவே பெய்துள்ளது. ஏமாற்றிய  பருவமழையால், சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளில் மொத்தம்1 புள்ளி 3 டி.எம்.சி தண்ணீர் மட்டும் தான் இருப்பு உள்ளது. இதனால், கோடை காலங்களில் சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டு ஏற்படக் கூடும் என பொதுமக்களிடையே அச்சம் நிலவுகிறது. எனினும், வீராணம் ஏரி, சிக்கராயபுரம் கல்குவாரி, போரூர் ஏரிகளில் கிடைக்கும் நீரை கொண்டு வரும் மார்ச் மாதம் வரை குடிநீர் தேவையை சமாளிக்க முடியும் என குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்