பெங்களூரு சிறையில் இன்றும் சசிகலாவிடம் வருமான வரித்துறை விசாரணை

பெங்களூரு சிறையில் இன்றும் சசிகலாவிடம் வருமான வரித்துறை விசாரணை

Update: 2018-12-14 00:42 GMT
சொத்து வழக்கு தொடர்பாக, சசிகலாவிடம், வருமான வரித்துறை அதிகாரிகள்,பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில், விசாரணை நடத்தினர். கடந்த ஆண்டு சசிகலா குடும்பத்தினர் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட அதிரடி வேட்டையில் சிக்கிய ஆவணங்கள் அடிப்படையில், இந்த விசாரணை நடத்தப்பட்டது. வீரராகவ ராவ் தலைமையில் வருமான வரித்துறையின் 7 அதிகாரிகள், பல மணி நேரம் சசிகலாவிடம் விசாரணை நடத்தினர். இன்றும், சசிகலாவிடம் விசாரணை நடத்த. வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக பெங்களூரு தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags:    

மேலும் செய்திகள்